தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயத்தின் 90ஆம் ஆண்டுவிழா

அனைவருக்கும் வணக்கம்..

எமது பாடசாலையின் 90 ஆம் ஆண்டு நிறைவினை வெற்றிகரமாக கொண்டாடுவதற்கு பழைய மாணவர் சங்கம் தயாராகவுள்ளது. எமது அங்கத்தவர்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலம் மாத்திரமே நாம் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்யலாம்.

பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களாகிய உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பினை எதிர்ப்பார்க்கின்றது.

நண்பர்களே,
எம்மை அரவணைத்து கல்வித்தாகம் தீர்த்த எமது பாடசாலையின் 90 ஆம் ஆண்டு நிறைவு விழா சம்பந்தமான விஷேட கலந்துரையாடலொன்று எதிர்வரும் சனிக்கிழமை ( 25/11/2023)
பிற்பகல் 4.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இட்மபெறும்.

இது ஒரு விஷேட பொதுக்கூட்டமாக நடாத்துவதற்கு எதிர்ப்பார்க்கிறோம். இந்த குழுவிலுள்ள நீங்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, இந்த கன்னி முயற்சிற்கு உதவி செய்வீர்கள் என சகோதரத்துவத்துடன் எதிர்ப்பார்க்கிறோம்.

கலந்துரையாட எதிர்ப்பார்க்கும் தலைப்புக்கள்

பழைய மாணவர்களுக்கான விஷேட T Shirts கள்.

90 ஆம் ஆண்டு விழாவிற்கான ஆயத்தங்கள்

நடை பவணியின் போது பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் குறித்தான தகவல்கள்.

பழைய மாணவர் சங்கத்தின் இந்த பெரிய முயற்சிற்கு உங்கள் அளவில்லாத பங்களிப்பை தருவீர்கள் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றோம்.

எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் சந்திப்போம்!!!!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *