நான் ரெடி பாடலின் முழுமையான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான நான் ரெடி பாடலை அனிருத் இசையில் விஜய் பாடியிருந்தார். 2000 குரூப் டான்ஸர்களுடன் அதிரடியாக ஆட்டம் போட்டிருந்தார் விஜய். அவருடன் மடோனா செபாஸ்டியன், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோரும் தெறிமாஸ் காட்டியிருந்தனர். திரையரங்குகளில் நான் ரெடி பாடல் தான் ரசிகர்களின் கொண்டாட்டமாக அமைந்தது.எதிர்பார்த்ததை போலவே ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.