திரு ஷண்முகம் செந்தில்குமார் மற்றும் திருமதி சுபாஷினி செந்தில்குமார் தம்பதிகளின் புதல்வியும், கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியுமான செல்வி ஹரித்ரா செந்தில்குமார் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 02ஆம் திகதி, மாலை 5.30 மணிக்கு பம்பலப்பிட்டி ஸ்ரீ மாணிக்க விநாயகர் கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.
கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் நடன நெறியாள்கையில், அணிசேர் கலைஞர்களாக, குரலிசை – ஸ்ரீ. ஆரூரன், மிருதங்கம் – ஸ்ரீ. நாகராஜன், வயலின் – ஸ்ரீ. திபாகரன், தாள தரங்கம் ஸ்ரீ. ரட்ணதுரை மற்றும் புல்லாங்குழல் – ஸ்ரீ. பிரியந்த ஆகியோரின் பங்களிப்புடன் அரங்கேற்றம் நடைபெறவுள்ளது.
திரு T K திருச்செல்வம் (நடன கலைஞர், நடன ஆசிரியர், நடன இயக்குனர் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர்) பிரதம விருந்தினராகவும், திருமதி செமாலி குணாதிலகே ஹேரத் (அதிபர், பிஷப் கல்லூரி) மற்றும் செல்வி கிருஷ்ணிகா கல்படகே (உப அதிபர், பிஷப் கல்லூரி) கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.