‘லியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு..!
தளபதி விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் வெளியான நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் லலித் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘லியோ’. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது இந்த படம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூல் செய்து சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
‘லியோ’ திரைப்படம் நவம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்