குடா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததை அடுத்து, எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக நீர்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, புலத்சிங்ஹல, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் இந்த பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவிசாவளை, மல்வானை, இரத்தினபுரி உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்குண்டு கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, மீட்பு பணிகளை முன்னெடுப்பதற்காக கடற்படை 10 குழுக்களை அனுப்பியுள்ளது.