சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மரதனோட்ட போட்டி!!

சர்வதேச போதை எதிர்ப்பு வாரத்தினை முன்னிட்டு மாபெரும் மரதனோட்டப் போட்டி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் காந்தி பூங்காவில் (31) திகதி இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களமும் இணைத்து இப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

” நண்பா போதைக்கும் புகைத்ததுக்கும் முற்றுட் புள்ளி வைப்போம் வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம் எனும் தொணிப்பொருளில் இப் போட்டிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

அரசாங்க அதிபரினால் கொடி அசைத்து மரதனோட்ட போட்டி ஆரம்பித்து வைகப்பட்டது.

12 பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து அதிகளவிலால வீரர்கள் இப் போட்டிகளுக்கு பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது 1 ஆம் 2 ஆம் இடங்களை செங்கலடி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த பாலசிங்கம் தசரதன், பரசுராமன் வினோராஜ், 3 ஆம் இடத்தினை வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த கு.விதுசன் ஆகியோருக்கு பணப்பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்படதுடன் எனைய வீரர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கப்பட்டது.

இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக இப்போட்டிகள் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் ராஜ்பாபு, உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், சமுர்த்தி உயர் அதிகாரிகள், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபையின் மாவட்ட இணைப்பாளர் பி.தினோஸ் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *