தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கவின்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் எனும் பிரபல தொடரில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் ரீச் ஆனவர். இந்த தொடரை தொடர்ந்து, விஜய் டிவியின் மற்றொரு ஃபேமஸ் நிகழ்ச்சியான சரவணன் மீனாட்சி தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் எக்கச்சக்கமான ரசிகர்களை ஈர்த்தவர்.
பிக் பாஸ் சீசன் 3 பொழுது போக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி கவினுக்கு ரசிகர் பட்டாளத்தை குவித்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சி கவினுக்கு வெள்ளித்திரையில் நுழைவதற்கான வாய்ப்புகளை பெற்று தந்தது என்றே கூறலாம். லிப்ட் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார் கவின், அதன் பின் அவர் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது. அதன் பின், சமீபத்தில் கவின் நடிப்பில் ஸ்டார் வெளியான ஸ்டார் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கவினுக்கு தற்போது அடுத்ததுதா பட வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது. பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சதீஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ’கிஸ்’, இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் உருவாகி வரும் ’ப்ளடி பெக்கர்’ மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் ’மாஸ்க்’ ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார் கவின்.
இந்நிலையில், மற்றும் ஒரு படத்தில் கவின் கமிட்டாகியுள்ளார், அதில் சிறப்பு என்னவென்றால் கவினுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பாணியாற்றிய விஷ்ணு எடவான் என்பவர் இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.