பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு…!

நுவரெலியா, மாத்தளை மற்றும் கண்டி மூன்று மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு 42 புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் மத்திய மாகாண தலைமை மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகே தலைமையில் ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆசிரியர்கள் நுவரெலியா, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாகாண சபையின் ஆளுமைக்குட்பட்ட பாடசாலைகளில் உயர்தரப் பாடங்களைக் கற்பிக்குமாறு
பணிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆசிரியர் நியமனம் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் அடிப்படையில் போட்டிப் பரீட்சையின் பின்னர் நடைமுறை மற்றும் நேர்முகத் தேர்வுகளின் பின்னர் வழங்கப்படுகிறது.

இந் நிகழ்வில் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் குணதிலக ராஜபக்ஷ, நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் எஸ்.பி. திஸாநாயக்க, ஆளுநரின் செயலாளர் மஞ்சுள மதஹபொல, மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் மேனகா ஹேரத், கல்வித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் (விளையாட்டு மற்றும் உடற் பயிற்சி) அதுல ஜயவர்தன மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மஸ்கெலியா நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *