நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார்.
இதையடுத்து, சூர்யாவின் 44-வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
இதற்கான அறிவிப்பு சில வாரங்களுக்கு முன் வெளியானது. இதை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார்.
இதன் படப்பிடிப்பு ஜூன் 2-ம் திகதி அந்தமானில் தொடங்குகிறது. அங்கு 40 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.