ஜூன் மாதம் தொடங்க உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தான் மிகவும் ஆபத்தானது என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் யோன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் தொடங்கவுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவுக்கு 5 அணிகள் இடம் பெறும். அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி களம் காண்கிறது. விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட வீரர்கள் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான யோன் மார்கன் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், மோத உள்ள 20 அணிகளில் இந்தியா தான் ஆபத்தான அணியாக உள்ளது என்று கூறியுள்ளார், ரோஹித் சர்மா தலைமையின் கீழ் இந்திய அணியால் மற்ற எந்த அணியையும் வீழ்த்தும் முடியும் என்று மார்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோன்று பல கிரிக்கெட் வல்லுனர்களும் இந்திய அணியை பாராட்டியுள்ளனர்.