பாதிக்கப்பட்ட புத்தளம் பிரதேச மக்களுக்கு கடற்படை நிவாரண உதவி

அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்ட புத்தளம் பிரதேச மக்களுக்கு கடற்படை நிவாரண உதவி

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அதிகரித்துள்ள அதிக மழை வீழ்ச்சி புத்தளம், மாதம்பே கடுபிடி ஒயா நீர் பாய்வதுடன், ஹேனேபொல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைத் திட்டமிடுவதற்காக கடற்படையின் நிவாரணக் குழு 2024 மே 26ஆம் திகதி அப்பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த நிவாரணக் குழுவினால் தற்போது பிரதேச மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் இடம்பெறுகின்றது.

புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே பிரதேச செயலகப் பிரிவின் ஊடாக வடிந்து சென்று கடுபிடி ஒயாவில் கலக்கும் மழை நீர் ஹேனேபொல கிராம சேவகர் பிரிவிற்குச் செல்லும் சகல வழிகளும் வெள்ள நீரில் தாழ்ந்து காணப்படுவதுடன், அதனால் அக்கிராம சேவகரின் கீழுள்ள 27 குடும்பங்களின் 89 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அன்றாட செயற்பாடுகளுக்காக அவசியமான நிவாரணங்களை வழங்குவதற்காக, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, கடற்படை நிவாரணக் குழு இவ்வாறு மாதம்பே பிரதேசத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கிணங்க, கடற்படை நிவாரணக் குழுவினால் நேற்று காலை (27) பாடசாலை மாணவர்கள் உட்பட, பிரதேச மக்களுக்கு கடற்படை படகு மூலம் அவசியமான போக்குவரத்து வசதிகளைப் பாதுகாப்பாக வழங்குவதுடன், அப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைவாக நிவாரண உதவிகளை வழங்குவதற்காக, கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் பிரியந்த பிரேரா வின் ஆலோசனைக்கு இணங்க சகல கடற்படைக் கட்டளைகளையும் உட்படுத்தும் விதமா கடற்படையினதும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினது 41நிவாரணக் குழுக்கள் கடற்படையினால் தொடர்ந்தும் தயாராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *