மாலைதீவு பிரஜைகள் இலங்கைக்கு வந்த பின்னர் 30 நாள் சுற்றுலா விசாவை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என மாலைதீவு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதோடு மாலைதீவு பிரஜைகள் 30 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு https://www.srilankaevisa.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று 6 மாத இலவச விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இந்த விசாவிற்கு நிர்வாகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இல்லையெனில், ஏற்கனவே இலங்கையில் இருக்கும் மாலைதீவு பிரஜைகள் மற்றும் விசா நீட்டிப்பு தேவைப்படுபவர்கள் கொழும்பில் உள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
அதேவேலை இலங்கையில் புதிய இ-விசா முறையின் அறிவிப்புடன், மாலைதீவு சுற்றுலாப் பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்ய, இலங்கை பிரதிநிதிகளுடன் மாலைதீவு வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.