முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையத்தினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்துவைத்தார்.
நெதர்லாந்து அரசாங்கத்தின் Drive மென்கடன் திட்டத்தின் கீழ் நான்காயிரத்து ஐநூறு மில்லியன் ரூபாய் (4500 மில்லியன்) பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையத்தினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்துவைத்தார்.
மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையம் ஆனது பல்வேறு பிரிவுகளை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது.
செயற்கை அவயங்களின் உற்பத்தி பிரிவு,
உளநல மேம்பாட்டு பிரிவு, பௌதீக புனர்வாழ்வு பிரிவு,
சத்திர சிகிச்சை கூடங்கள், சிறுவர் மற்றும் பெரியோர் இயன் மருத்துவப் பிரிவு, எக்ஸ் கதிர் பிரிவு,
வெளி நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, சத்திர சிகிச்சை, பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று விடுதிகள், ஆய்வுக்கூடம், தீவிர சிகிச்சை பிரிவு, மற்றும் நிர்வாகப் பிரிவு முதலான பல பிரிவுகளைக் கொண்டுள்ளது. இலங்கையில் ராகம வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மருத்துவ புனர்வு வாழ்வு சிகிச்சை மற்றும் உள நல மேம்பாட்டு நிலையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வட மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ளஸ், கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைதீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. காதர் மஸ்தான், இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபச் அம்மையார், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு. செல்வம் அடைக்கலநாதன், திரு. வினோ நோகரலிங்கம், வடமாகாண பிரதம செயலாளர் திரு எல். இளங்கோவன்,மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் திரு சுனில் கலகம, வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. எம்.ஜெகூ, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சமன் பத்திரன, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம். உமாசங்கர், மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், வைத்தியர்கள், தாதியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்ட செயலகம்
முல்லைத்தீவு