கார்த்தியின் 26 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

நடிகர் கார்த்தியின் 26வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்தி அந்த படத்தை தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று, பொன்னியின் செல்வன், பையா உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தன.

ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் கார்த்தியின் 26 வது படத்திற்கு வா வாத்தியார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார்.

இவர் முன்னதாக சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். வா வாத்தியார் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *