இன்று நடைபெறும் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலபரிட்சை நடத்த உள்ளன.
17 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணிக்கு பிசிசிஐ பரிசுத்தொகையை அறிவித்துள்ளது.
ஐபிஎல் 2024ஆம் ஆண்டிற்கான தொடர் 73 போட்டிகளை கடந்து இன்று இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலபரிட்சை நடத்த உள்ளன.
இதற்கு முன் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், பெங்களூரு அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி. குவாலிபையர்-2 போட்டியில், ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது .
பரிசுத்தொகை விவரங்கள்:
இந்த தொடருக்கான பரிசுத்தொகையாக மொத்தம் ரூ.46.5 கோடியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, இன்று வெற்றிப்பெறப்போகும் அணிக்கு இந்திய மதிப்பின்படி ரூ.20 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும். மேலும் தோல்வியடையும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.13 கோடி பரிசுத்தொகையாக கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, இந்த தொடரில், மூன்றாவது இடம்பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.7 கோடியும், நான்காவது இடம்பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.6.5 கோடி ரூபாயும் வழங்கப்படும்.
Orange Cap மற்றும் Purple Cap:
இதுவரை விளையாடிய 15 போட்டிகளில், 741 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆரஞ்ச் தொப்பியை வைத்துள்ளார். இந்த இறுதிப்போட்டியில் அவரின் ரன்களை கடந்து அரஞ்ச் தொப்பியை மற்றவர்கள் வாங்க வாய்ப்புகள் குறைவு தான். எனவே விராட் கோலி ஆரஞ்ச் தொப்பியை பெற்றதற்காக ரூ.15 லட்சத்தை பரிசுத்தொகையாக பெறுவார்.
மேலும் பஞ்சாப் கிங்ஸ் பவுலரான ஹர்ஷல் படேல் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்புல் கேப்பை வைத்துள்ளார். அவருக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
வளர்ந்து வரும் வீரருக்கு ரூ.20 லட்சம் பரிசும், மிகவும் மதிப்புமிக்க வீரருக்கு ரூ.12 லட்சம் பரிசுத்தொகையாகவும் வழங்கப்படும்.