தனது 50 வது படமான ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது. படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ் ஜே சூர்யா, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷார விஜயன், என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தையே களமிறங்கியுள்ளார் தனுஷ்.
கேங்ஸ்டர் கதைக்களத்தைக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது. ராயன் படத்தில் தனுஷ் குரலில் ’ அடங்காத சூரன்’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
ந்த நிலையில், படத்தின் 2வது சிங்கிள்ஸ் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியானது. இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு ராயன் படத்தின் ‘வாட்டர் பாக்கெட் மூஞ்சி பாடல்’ வெளியானது. அறிமுக பாடலாசிரியர் கானா காதர் வரிகளில், ஏஆர் ரஹ்மானின் துள்ளலான கானா இசையில், சந்தோஷ் நாராயணன், ஸ்வேதா மேனன் குரலில் உருவாகியுள்ளது இந்த பாடல்.
சுதீப் கிஷன் அபர்ணா பாலமுரளி இருவருக்குமான காதல் கானா பாடலாக இந்த பாடல் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் குரலில் இந்த கானா பாடல் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. வெளியான சில மணி நேரத்திலேயே அதிக பார்வையாளர்களை பெற்றுவருகிறது இந்த பாடல்.
தனுஷ் ரசிகர்களை இந்த பாடல் ஈர்த்துள்ளது. மேலும் தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.