ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. வழக்கம் போல சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனர்கள் அதிரடி காட்ட தொடங்கினர். ஆனால் வெறும் 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அபிஷேக் ஷர்மா 12 ரன்கள் எடுத்து ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் வெளியேறினார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி, 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த மார்க்ரம் 1 ரன்னுடனும், ட்ராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும் வெளியேற, ஹைதராபாத் அணி 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு நிதீஷ் ரெட்டி, அப்துல் சமத் என ஆவேஷ் கான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுக்க, ஹைதராபாத் அணி 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது.
பிறகு ஜோடி சேர்ந்த க்ளாசன் – சபாஷ் அகமது, பந்தை அனைத்து திசைகளிலும் விரட்டினர். அதிரடியாக விளையாடிய க்ளாசன் 33 பந்துகளில் அரைசதமடித்து வெளியேறினார். சபாஷ் அகமது 18 ரன்கள் எடுத்து ஆவேஷ் கான் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளும் சந்தீப் சர்மா 1 விக்கெட்டும் எடுத்தனர். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அஷ்வின் சோபிக்கத்தவறினார். சுழற்பந்து வீச்சாளரான சாஹலும் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக இருந்தது. இளம் அதிரடி வீரர் அபிஷே் சர்மா 12 ரன்னில் அவுட்டானார். சற்று நேரம் அதிரடியாக ஆடிய திரபாதி 37 ரன்னிலும் டிராவிஸ் ஹெட் 34 ரன்களிலும் அவுட்டாகினர்.
சுழலில் ராஜஸ்தான் அணி சோபிக்க தவறினாலும் சன்ரைசர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மாறிமாறி விக்கெட்டை சாய்த்தனர். சபாஷ் அகமது 3 விக்கெட்களையும் அபிஷேக் சர்மா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
ராஜஸ்தான் அணியில் அதிரடியில் நம்பிக்கையாக இருந்த ஹெட்மெயர், ரோவ்மன் பவல் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். துருவ் ஜூரலின் அரைசதம் மட்டும் அணிக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்களை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹைதரபாத் அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.
வரும் 26 ஆம் சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் இறுதி போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதாராபாத் அணிகள் மோத உள்ளன.