இன்றுடன் நிறைவு பெற்றது சிவனடி பாத மலை பருவகாலம்

சிவனடி பாத மலை 2023/2024 க் காண பருவகாலம் இன்று மதியம் நிறைவு பெற்றது.

சிவனடி பாத மலை உச்சியில் இருந்து சமன் தெய்வம் மற்றும் தெய்வ ஆபரணங்கள் பூஜை பொருட்கள் அனைத்தும் இரத்தினபுரி பலாபத்த வழியாகவும், நோட்டன் வழியாகவும், பொகவந்தலாவ வழியாகவும் இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹாவிகாரைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சுப வேளையில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் திகதி முதல் ஆரம்பமான சிவனடி பாத மலை பருவகாலம் 2024 /05/24 ம் திகதி வைகாசி விசாகம் பௌர்ணமி நாளில் நிரைவுக்கு வந்துள்ளது.


மேலும் 2024 /2025 க்கு ஆன சிவனடி பாத மலை பருவகாலம் எதிர் வரும் டிசம்பர் மாதம் 25 ம் திகதி மீண்டும் ஆரம்பமாகும்.


இன்றைய தினம் சிவனடி பாத மலை உச்சியில் இருந்து சுவாமிகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் லக்சபான இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் உதவியுடன் மலை அடிவாரத்தில் உள்ள பௌத்த மத்திய நிலையத்திற்கு கொண்டு வரபட்டு அங்கு நல்லதண்ணி நகரில் உள்ள அனைத்து மக்களும் தரிசனம் செய்ய பின்னர் வாகன தொடரணியில் இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹாவிகாரைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

மஸ்கெலியா செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *