மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்ஷீக் தோட்ட டனட்டர் பிரிவில் நேற்று மதியம் வீசிய கடும் காற்றினால் அங்கு உள்ள 8 குடியிருப்புகளில் கூறை தகடுகள் பறந்து விட்டன.
8 குடும்பங்களைச் சார்ந்த 40 பேர் அங்கு உள்ள அம்மன் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் நோர்வூட் பிரதேச செயலாளர் வழங்க ஏற்பாடு செய்து உள்ளதாக அப் பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.
தோட்ட நிர்வாகம் உடன் சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
மஸ்கெலியா செய்தியாளர்