கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சினால் மட்டக்களப்பு வெபர் உள்ளக அரங்கில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டுக்கான மல்யுத்த போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சம்பியனானது.
திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வீரர்கள் பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக போட்டியிட்ட சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டு கழக வீரர்கள் 11 தங்கப் பதக்கங்களையும், 8 வெள்ளிப் பதக்கங்களையும், 2 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.