ஹட்டன்- கண்டி, ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை நகரை அன்மித்த பகுதியில் பாரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்த நிலையில் இவ் வீதியூடான போக்குவரத்திற்கு தடையேற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
இன்று பகல் ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக இவ் வீதி ஊடாக ஹட்டனில் இருந்து கினிகத்தேன வழி ஊடாக கண்டி,கொழும்பிற்கு செல்லும் வாகனங்களும் அதேபோல் கொழும்பு, கண்டி பகுதிகளில் இருந்து ஹட்டன் நுவரெலியா மற்றும் ஏனைய பிரதேசத்திற்கு பயணிக்கும் வாகனங்களும் பயணிக்க முடியாத நிலையில் இவ் வீதியில் நீண்ட தூரத்திற்கு நீண்ட நேரமாக வாகனங்களும்,
பயணிகளும் கொட்டும் மழையில் காத்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
கன மழை மற்றும் கடும் காற்று வீசுவதால் உடனடியாக அகற்ற முடியவில்லை,
அதேநேரத்தில் வட்டவளை பொலிஸார் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணியாளர்கள் மற்றும் அப் பகுதியில் உள்ள மக்கள் உதவியுடன் கடும் காற்றில் சரிந்த மரத்தின் பாரிய கிளைகளை மற்றும் மரத்தை அகற்றி போக்குவரத்து சீர் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நீண்ட நேரத்திற்கு பிறகு ஒரு வழி வீதியாக திறக்கபட்டது என போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்