ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு வெளியேறிய நிலையில், அந்த அணிக்காக விளையாடி வந்த தமிழ்நாடு வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்றார்.
அகமதாபாத்தில் நடைபெற்ற பிளேஆஃப் போட்டியில் தோல்விக்குப் பிறகு விராட் கோலி உட்பட ஆர்சிபி வீரர்கள், மூத்த விக்கெட் கீப்பர்-பேட்டரான தினேஷ் கார்த்திக்கிற்கு மரியாதை செய்து பிரியாவிடை அளித்தனர். அப்போது அவர் தனது கையுறைகளை கழற்றி மைதானத்தை வலம் வந்து ரசிகர்களின் பாராட்டையும் ஏற்றுக்கொண்டார்.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கிய முதல், 17 ஆண்டுகள் விளையாடிய வீரர்களில் 38 வயதான தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். மொத்தம் 257 போட்டிகளில் ஆடி 4,842 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 22 அரை சதங்கள் அடக்கம். நடப்பு சீசனில் 15 போட்டிகளில் ஆடி 326 ரன்களை சேர்த்த அவர், மீண்டும் ஒரு முறை ஆர்சிபி-க்கு ஃபினிஷராக செயல்பட்டார்.
2008ல் டெல்லி அணிக்காக முதன்முதலில் களமிறங்கிய அவர், தொடர்ந்து டெல்லி, குஜராத், கொல்கத்தா, பெங்களூரு என 6 அணிகளுக்காக விளையாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.