ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகளப் போட்டியில் இலங்கையின் சமித்த துலான் எப்-44 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார்.
துலான் முதல் முயற்சியிலேயே 66.49 மீற்றர் தூரத்தை வீசி இந்த உலக சாதனையை படைத்துள்ளார். இதன்போது அவர் 2001 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியாவின் எம் புருயான் படைத்த சாதனையையே முறியடித்துள்ளார். அப்போது புருயான் 66.49 மீற்றர் தூரம் வீசி இருந்தார்.
எனினும் இந்தப் போட்டியில் அவர் இரண்டாவது இடத்தையே பெற்றார். இதில் முதல் இடத்தை எப் 64 பிரிவில் போட்டியிட்ட அந்தப் பிரிவில் உலக சாதனைக்கு சொந்தக்காரரான இந்திய வீரர் சுமித் வென்றார். அவர் போட்டியில் 69.50 மீற்றர் தூரம் எறிந்தார்.