அசாதாரண காலநிலையினால் புத்தளம் மாவட்டத்தில் 19,128 நபர்கள் பாதிப்பு

இலங்கையயைச் சுற்றி ஏற்பட்டு வரும் முன்கூட்டிய காலநிலை காரணமாக, கடந்த 24மணித்தியாலங்களுக்குள் அதிக மழை வீழ்ச்சியாக புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 212.5மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இம்மழை வீழ்ச்சியினால் பலத்த காற்றுடன் நீர் மட்டம் அதிகரித்து வெள்ளம் அனர்த்தம் ஏற்பபட்டுள்ளதனால் மாவட்டத்தில் 19,128நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் எச். எம். எஸ். பி. ஹேரத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான நிவாரணப் பணிகளை பிரதேச செயலாளர்கள், அனர்த்த நிவாரண சேவை அதிகாரிகள் மற்றும் கிராம சேவகர்களின் தலையீட்டில் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருவலகஸ்வெவ, மாதம்பே, மஹகும்புக்கடவல, முந்தல், புத்தளம், சிலாபம், ஆரச்சிக்கட்டு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மக்கள் இவ்வனர்த்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கிணங்க கருவலகஸ்வெவ வீரபுர, மாதம்பே குடிரிப்புவ பகுதிகளில் தலா ஒரு குடும்பமும், மஹகுமுபுக்கடவல மொஹொரிய மற்றும் கடயங்குளத்தில் தலா நான்கு குடும்பங்களும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாரகுடிவில்லுவ, மந்துரன்குளிய, நல்லதரன்கட்டுவ, அகுணவில, கரதன்வில்லுவ, புபுதுகம ஆகிய இடங்களில் 343 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் பாலாவி, புத்தளம் தெற்கு, மணல் தீவு, ரத்மல்யாய, முல்லிபுரம், சேனகுடியிருப்பு, தில்லையடி, அட்டவில்லுவ, புத்தளம் கிழக்கு, மரைக்கார் வீதி, புதுகுடியிருப்பு ஆகிய பகுதிகளில் 4,582குடும்பங்களைச் சேர்ந்த 18,497பேர் இவ்வதிகரித்த மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறே சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவில் குருசபாதுவ யில் 17 நபர்களும், ஆரச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் ராஜகதலுவ, ஆனவிழுந்தாவ, மகமாஎலிய பகுதியில் 66 குடும்பங்களின் 256 நபர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 7 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைத்தங்கல் முகாம்கள் 4 அமைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் தெற்குப் பகுதியில் 200 குடும்பங்களின் 600 பேர் ஸ்ரீவிசுத்தாராம விகாரையில் தங்கியுள்ளனர்.

இப்பகுதியில் புத்தளம் தெற்கு சனசமூக நிலையத்தில 50குடும்பங்களின் 160பேர் தங்கியிருந்தனர்.

பாலாவியில் குவைத் கிராம முன்பள்ளியில் 50குடும்பங்களின் 185 நபர்களும் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்ட்டுள்ளனர்.

அவ்வாறே மல்லி புரத்தில் வெட்டால் அரசாங்கப் படசாலையில் 40 குடும்பங்களின் 195 பேரும் பாதுகாப்பாகத் தங்குவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இப்பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 1140நபர்களுக்குத் தற்போது சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளை அனர்த்த நிவாரண சேவைகள் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *