கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சியில் பிரதேசத்தில் கடலட்டை வளர்ப்பிற்கான கடலட்டை பண்ணை அனுமதிப்பத்திரங்கள் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவினால்நேற்று (20) வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது 56 பயனாளிகளுக்கான கடலட்டை பண்ணைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிராஞ்சியில் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில், கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் வகையில் இவ்வாறு அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.