முல்லைத்தீவு மாவட்டத்தில் எழுந்தருளியுள்ள வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உட்சவம் பல லட்சம் பக்தர்கள் புடைசூழ மிகச் சிறப்பான முறையில் இன்று(20) நடைபெற்றுவருகின்றது.
பல்லாயிரம் பத்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை அதிகாலையில் இருந்து நிறைவேற்றி வருகின்றனர்.
கொழும்பு, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாவட்டத்தினை சேர்ந்த அதிகளவான பக்தர்கள் இம்முறை வற்றாப்பளை கண்ணகி அம்மனை தருசிக்க வந்துள்ளார்கள்.