இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் உள்ளூர் ஊடகவியலாளர்களுக்கிடையில் அநாமதேய ஒத்துழைப்பை வளர்க்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட ஊடக மன்ற ஸ்தாபன வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் மன்றம் அண்மையில் நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்டது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திரு.மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான அச்சு மற்றும் இலத்திரனியல் சிங்கள மற்றும் தமிழ் உள்ளூர் ஊடகவியலாளர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்