தற்போதைய அசாதாரண காலநிலை காரணமாக புத்தகம் மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் இன்று (20) விடுமுறை வழங்குவதற்கு வடமேல் மாகாண ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
நாட்டில் காணப்படும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புத்தளம் மாவட்ட செயலாளர் மற்றும் வடமேல் மாகாண மாகாண பிரதான செயலாளர் ஆகியோருடைய இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பாடசாலை மாணவ மாணவிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இன்று (20) புத்தளம் மாவட்டத்தின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.