பயிற்சிப் போட்டிகளுக்கு முன்னர் குசல் அணியுடன் இணைந்து கொள்வார் – அஸ்லி டி சில்வா

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்கா விற்கு செல்வதற்கு விசாவிற்கு விண்ணப்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் குசல் மெண்டிஸின் விசா அனுமதிப்பத்திரம் அதன் தூதுவர் அலுவலகத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஸ்லி டி சில்வா விரைவில் அவ்வனுமதி விசா கிடைத்துவிடும் என நம்புவதாகத் தெரிவித்தார்.

இலங்கை பிரிமியர் லீக் போட்டியில் விளையாட்டு வீரர்கள் ஏலம் போகும் விதம் தொடர்பாக (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதம நிறைவேற்று அதிகாரி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஊடகங்களினால் மேற்கொள்ளப்படும் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த அவர், அத்தூதுவராலயத்தின் நபர்கள், குசல் மெண்டீஸுடன் இது தொடர்பாக தொடர்புகொண்டு வீச அனுமதிப்பத்திரம் தயாரித்தல் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
“உண்மையிலேயே ஐ சி சி விசா வழங்குவது தொடர்பாக ஆதரவை வழங்கும் காலம் இம்மாதம் 25ஆம் திகதி தான் ஆரம்பிக்கும், ஆனால் அங்கு காணப்படும் காலநிலை மற்றும் ஆடுகள நிலைமைகளின் கீழ் பழக்கப்பட நாம் அணியை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அனுப்பிவிட்டோம்.

அதனால் எவ்வித காலதாமதமும் ஏற்படவில்லை. ஐ சி சி உலகக்கிண்ண நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது குசலுக்கு அங்கு செல்ல முடியும் என்றார்.

அதுபோல் ஆடுகளம் அவருக்கு உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு முன்னர் இடம்பெறும் போட்டிகளில் பங்குபற்றும் போது பழக்கப்படும்” என்றும் பிரதான அதிகாரி இது தொடர்பாக தெரிவிக்கையில்,  அது குறித்து மேலும் வலியுறுத்தினார்.  

சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் ஏற்பாட்டில் இடம்பெறும் இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் பயிற்சிப் போட்டி மே 27ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுவதுடன், இலங்கை அதில் 28ஆம் திகதி நெதர்லாந்திற்கு எதிராக புளோரிடா வில் முதல் போட்டியிலும், அயர்லாந்திற்கு எதிராக அந்த மைதானத்தில் இரண்டாவது போட்டியிலும் பங்கு பற்றவுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *