கிழக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் ஆயிரக்கணக்கானேர் அஞ்சலி செலுத்தினர்.
(கனகராசா சரவணன்)
கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெரும் திரளான மக்கள் சனிக்கிழமை (18) கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சாந்தி வேண்டி ஈகைச் சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
கிழக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இலங்கை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த் நூற்றுக்கண க்கானோர் இன்று மட்டு காந்தி பூங்காவில் ஒன்று திரண்டனர்.
இவ்வாறு ஒன்று திரண்ட மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட் மக்களுக்கு நீதிவேண்டும் எனகோரி வெள்ளை கொடிகள் ஏந்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கு அமைக்கப்பட்ட நினைவேந்தல் பகுதியில் ஈகைச் சுடர் ஏற்றி உணர்வு பூர்வமாக மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரிடம் 8 கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஓன்றை கையளித்ததை தொடர்ந்து அங்கிருந்த அனைத்து பொதுமக்களுக்கும் கஞ்சி பரிமாற்றம் இடம்பெற்றது.