பிளே ஆஃபில் முதல் மூன்று இடங்கள் உறுதியாகிவிட்ட நிலையில் பெங்களூருவில் (18) நடைபெறும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி இதனால் காலிறுதி போட்டியை போல மாறியுள்ளது.
13 போட்டிகளில் விளையாடி சென்னை 14 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், அதே எண்ணிக்கையிலான போட்டிகளில் ஆடி பெங்களூரு 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் சென்னை அணி வென்றாலே போதும், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம். ஆனால் பெங்களூரு அணி வென்றால் மட்டும் போதாது. முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களைக் குவித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்த வேண்டும். இரண்டாவதாக பேட்டிங் செய்தால் 18.1 ஓவரிலேயே வெற்றிக்கனியை பறிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கையோடு காத்திருக்கும் பெங்களூரு ரசிகர்களுக்கு கோலி அண்ட் கோ நம்பிக்கை தருமா அல்லது சென்னையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் தோனி விளையாட வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை சென்னை வீரர்கள் உறுதி செய்வார்களா என்பது சனிக்கிழமை இரவு தெரிந்துவிடும்.