திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி பதவி
உயர்வு பெற்று வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் பெற்று செல்லும் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் பிரியாவிடை மற்றும் சேவை நலன் பாராட்டு விழாவும் (16) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மேலதிக அரசாங்க அதிபரின் சேவையை பாராட்டி மாவட்ட அரசாங்க அதிபரினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கான நினைவு சின்னங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
கமநல அபிவிருத்தி திணைக்களத்தில் (வவுனியா, மன்னார்) ஒரு வருட காலமாக விவசாய அபிவிருத்தி உதவி ஆணையாளராகவும், தொழில் திணைக்களத்தில் (கொழும்பு, திருகோணமலை) மூன்று வருட காலமாக உதவி தொழில் ஆணையாளராகவும், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் ஆறு வருட காலமாக பிரதேச செயலாளராகவும் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் கடமையாற்றியுள்ளார்.
மேலும் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சில மாதங்களாக மாவட்ட அரசாங்க அதிபராக பதில் கடமை புரிந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன் ,பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர் , பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், சக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
District Media Unit
Trincomlaee
All reactions:
12You, Winson Gnanatheepan and 10 others