காத்தான்குடி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் 38 வது வருடமாக ஹாஜாஜி கந்தூரி!!

காத்தான்குடி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் 38 வது வருடமாக ஹாஜாஜி கந்தூரிக்கான கொடியேற்றும் நிகழ்வு கடந்த புதன்கிழமை மாலை இடம் பெற்றது.

காத்தான்குடி பதிரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் வருடந்தோறும் இடம் பெற்று வரும் அஜ்மீர் ஹாஜா முயினுத்தீன் சிஷ்தி அவர்களின் பெயரிலான கந்தூரி நிகழ்வின் 38 வது வருட கந்தூரி நிகழ்வுக்கான ஆரம்ப நாள் கொடியேற்றம் கடந்த (15) திகதி இடம் பெற்றது.

இந்த கந்தூரி நிகழ்வு காத்தான்குடி அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி ஏ.ஜே.அப்துர் ரஊப் மிஸ்பாஹி தலைமையில் இடம்பெற்றது

இதில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.கே.குலதுங்க. இந்திய தூதரகத்தின் கொன்சிலர் சன்சீவ் அரோரா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் மட்டக்களப்பு கல்லடி 243 வது இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சந்திம குமாரசிங்க, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உஜித் லியனகே உட்பட பாதுகாப்பு உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது தேசியக் கொடி மற்றும் கந்தூரி கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்டன.

காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.எம்.ஜெஸீம் உட்பட உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து பிராத்தனை நிகழ்வும் இடம் பெற்றதுடன், தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு மெளலூது மற்றும் மார்க்க உரைகள் உட்பட பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்று எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமையன்று அன்னதானம் வழங்கப்பட்டு கந்தூரி நிறைவு பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *