வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உட்சவம் வருகின்ற 20.05.2024 திங்கள் கிழமை அன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னாயத்த வேலைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.
இதன் செயற்பாடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயச் சூழலில் சிரமதானப்பணி இன்று காலை 6.00 மணிதொடக்கம் காலை 8.00 மணிவரை நடைபெற்றது.
இந்த சிரமதானப்பணியில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு. அ.உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், இலங்கை மின்சார சபையின் உத்தியோகத்தர்கள் இணைந்து சிரமதானப் பணியினை முன்னெடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.