மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
தேமுதிக நிறுவனரும் நடிகருமான மறைந்த விஜயகாந்திற்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில், அதற்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கான புத்தகத்தில் விஜயகாந்தின் வரலாற்றை குறிப்பிட்டு இருப்பது, அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
விஜயகாந்த் இல்லை என்பதை தன்னால் தற்போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று நடிகர் ரஜினிகாந்தி கூறினார். மேலும், விஜயகாந்தை மதுரை வீரன் என குறிப்பிட்ட ரஜினிகாந்த், அவரது நாமம் வாழ்க என்று தெரிவித்தார்.