தமிழ் சினிமாவின் பிரபல நடிகை சினேகா ஒருமுறை தான் அணிந்த உடையை மீண்டும் அணியவே மாட்டாராம்.. சினேகா சந்தித்த அந்த விமர்சனம் தான் காரணமாம்..கரணம் இதுதான்..
தமிழ் சினிமாவின் சிரிப்பழகி என்று கூறினாலே நம் நினைவுக்கு முதலில் வரும் நடிகை சினேகாதான்.
வசீகரா, உன்னை நினைத்து, பார்த்தாலே பரவசம், ஏப்ரல் மாதத்தில், புதுப்பேட்டை, வசூல் ராஜா, கோவா மற்றும் பல படங்களில் நடித்த சினேகா டாப் நாயகியாக வலம் வந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்த சினேகா, 2009 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் அடித்தபோது நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டார்.
இவர்கள் இருவரும் 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தற்போது விகான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.
தற்போது விஜய் நடித்து வரும் கோட் படத்தில் நடித்து வரும் சினேகா, படங்களில் குணசித்ர வேடங்களிலும், தொலைக்காட்சிகளின் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், நடிகை சினேகாவின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசியுள்ள சினேகா கூறுகையில், ‘ஒரு முறை பிரபல பத்திரிக்கை ஒன்றில் ஒரே ஆடையை பல முறை அணிகிறார் சினேகா, அவருக்கு அணிய வேறு ஆடைகளே இல்லை என்று பலமுறை எனது ஆடையை குறித்து பல விமர்சனங்கள் வந்துகொண்டே இருந்தது.
இதனாலேயே நான் ஒருமுறை போட்ட உடையை மீண்டும் போடவே மாட்டேன், அந்த உடையை எனது நண்பர்களுக்கோ அல்லது எனக்கு தெரிந்தவர்களுக்கு கொடுத்து விடுவேன்.. ஒரு டிரஸ் ஒருமுறை தான்” என்று கூறியுள்ளார்.
சினேகாவின் இந்த டிரஸ் பாலிஸி தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்று வைரலாகி வருகிறது.