வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே, டிசம்பர் பண்டிகை காலத்துக்காக 100,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதை உறுதி செய்தார்.
கீரி சம்பா மற்றும் சம்பாவிற்கு பதிலாக மாற்று அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,அடுத்த சில நாட்களில் அரிசியை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதன் மூலம் விலையை கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் தொகையை அதிகரிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.