ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டி வரும் 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் விவரத்தை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
இந்திய அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு:-
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெய்குவாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ஷிவம் துபே, ரவி பிஷோனி, அர்ஷ்தீப் சிங், பிரஷித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார்.