Youtube பிரபலம் Irfan சமீபத்தில் இலங்கை வந்திருந்தார். நவம்பர் 4ஆம் தேதி Colombo Havelock City இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் அவர் கலந்து கொண்டிருந்தார்.
அவரை காண்பதற்காக நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள் அங்கு ஒன்று திரண்டிருந்தனர். தன்னுடைய youtube அனுபவங்கள் இலங்கையில் தான் சென்ற இடங்கள் பற்றி சுவாரஸ்யமாக பேசிய அவர் ரசிகர்களுடைய கேள்விகளுக்கும் கலகலப்பாக பதில் அளித்தார்.
இந்நிகழ்வில் அவரது மனைவி தாயார் உட்பட குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் கௌரி பிருந்தன் Irfan உடன் இணைந்து நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான அனுசரணையைFitsAir வழங்கி இருந்தது. இந்த நிகழ்வுகளை Irfan தன்னுடைய Facebook பக்கத்திலும் Youtube தளத்திலும் பகிர்ந்து உள்ளார்.