எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட அந்நாட்டின் ஆளும் கட்சியில் இணைந்துள்ளார்,பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன்
ஆளும் கட்சியான அவாமி லீக்கின் வேட்புமனுவைக் கோரி, முறைப்படி அரசியலில் நுழைந்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் இவர் போட்டியிடுவார் என்பது உறுதியாகவுள்ளது.
அவாமி லீக் இணைச் செயலாளர் பஹவுதீன் நசிம் மற்றும் அந்நாட்டு ஊடகங்ககளும் உறுதிப்படுத்தியுள்ளன.