மாதவனுடன் கங்கனா ரனாவத் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார்.!!

சூப்பர் ஸ்டார்

மாதவனுடன் கங்கனா ரனாவத் நடிக்கும் புதிய படம் இன்று சென்னையில் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருகை தந்தார்.

கங்கனா நடிப்பில் ‘எமர்ஜென்சி’ திரைப்படம் வெளியாக உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய்யும் நடிகை கங்கனா ரனாவத்தும் புதிய படம் ஒன்றுக்காக கைகோத்துள்ளனர்.

சைக்காலஜி த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள கங்கனா ரனாவத், “படப்பிடிப்பு தளக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து எங்களை ஆச்சரியப்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். என்ன ஓர் அற்புதமான தருணம்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *