2023ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியிருந்தன.
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மாணவன் நவராசா கோவண்ணன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல்நிலையை பெற்றுள்ளார்.
திருகோணமலை கல்வி வலயத்தில் 2,300 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் இதில் 293 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.