தேவையான பொருட்கள்
2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் சிரகம்
3 பச்சை மிளகாய்
ஒரு துண்டு இஞ்சி
1 கொத்து கருவேப்பிலை
1 வெங்காயம் நறுக்கியது
அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 சிட்டிகை பெருங்காயத்தூள்
4 வேக வைத்த உருளைக்கிழங்கு
கொத்தமல்லி
உப்பு தேவையான அளவு
1 கப் கடலை மா
கால் கப் மைதா மா
2 டீஸ்பூன் மிளகாய் பொடி
உப்பு தேவையான அளவு
பொறிக்கும் அளவு எண்ணெய்
செய்முறை: உருளைக்கிழங்கு வேக வைத்து எடுத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். அதில் கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும். நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கியதை , மஞ்சள் பொடி சேர்க்கவும். தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும், பெருங்காயத்தை சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளரவும். தொடர்ந்து அவித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். இதை கிளரவும். ஒரு கப் கடலை மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து, தண்ணீர் சேர்த்து மாவாக மாற்றவும். தற்போது செய்த மசாலாவை உருண்டைகளாக மாற்றி, மாவில் மூழ்கிய பின் எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.