உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 19 திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.இந்த போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.
வெற்றிப்பெறும் அணிக்கு, 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாவில் சுமார் ரூ. 131 கோடி)
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை ரூபாவில் சுமார் ரூ.65 கோடி) வழங்கப்படும்.
அரையிறுதியில் தோல்வியடையும் இருவருக்கு தலா 800,000 டொலர் (இலங்கை ரூபாவில் சுமார் ரூ. 26 கோடி)
நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதி பெறத் தவறிய மற்ற ஆறு அணிகளுக்கு தலா 100,000 டொலர் (இலங்கை ரூபாவில் ரூ. 3.3 கோடி) வழங்கப்படும்.
ஒவ்வொரு குழு நிலை ஆட்டத்தில் வெற்றி பெறும் அணிக்கு 40,000 டொலர் (சுமார் ரூ. 1.3 கோடி) ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
போட்டி முழுவதும் வெற்றிபெறும் அனைத்து அணிகளுக்கும் மொத்தம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை ரூபாவில் ரூ. 329 கோடி) ஐசிசி வழங்கும்.