உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், அகமதாபாத் ஹோட்டல் அறையின் சராசரி விலை ஒரு இரவுக்கு ரூ.10,000 முதல் ஒரு லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
வருகிற ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 19 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் அவுஸ்திரேலியா . இப்போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அகமதாபாத்தில் நடைபெறும் ஐ.சி.சி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவை உற்சாகப்படுத்த ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஹோட்டல் கட்டணங்கள் மற்றும் நகரத்திற்கான பயண டிக்கெட்டுகளில் அபரிதமான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
ஹோட்டல் அறையின் சராசரி விலை ஒரு இரவுக்கு ரூ.10,000 என வசூலிக்கப்படுகிறது. அகமதாபாத்தில் நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு இரவுக்கு ரூ.1 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக மனிகண்ட்ரோல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
புக்கிங்.காம், மேக் மை ட்ரிப் மற்றும் அகோடா போன்ற ஹோட்டல் முன்பதிவு தளங்களிலும் ஹோட்டல் கட்டணங்கள் அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. தற்போதும் அது தொடர்ந்து வருகிறது.