தெனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வாத்துவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை 3.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், அப்போது பேருந்தில் சில பயணிகளே இருந்ததாகவும் கூறப்படுகிறது.
பேருந்து விபத்துக்குள்ளானதில் மின்கம்பம் மற்றும் தொலைபேசிக் கம்பம் உடைந்ததுடன், அருகில் இருந்த இரண்டு வீடுகளின் சுவர்கள் முற்றாக சேதமாகியுள்ளது.
பேருந்தில் பயணித்த நடத்துனர் படுகாயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.