ஏர் கனடா போயிங் 777-300ER விமானம் டோக்கியோவின் நரிடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 12 மணி நேர பயணத்திற்கு பிறகு ரொறன்ரோவில் தரையிறங்கும் போது கடுமையான ஆட்டம் கண்டது.
கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்று வீசியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன்போது விமானத்தின் வலது சக்கரம் முதலில் தரையில் பட்டு குதித்து, மார்புபுரம் இடது சக்கரத்தில் மீண்டும் குதித்து, பின்னர் மெதுவாக சமநிலைக்கு வந்தது.
விமானத்தில் இருந்த 373 பயணிகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோவை வேக் டர்புலன்ஸ் ஏவியேஷன் பகிர்ந்துள்ளது.