நேற்றைய தினம் நடைபெற்ற, முதல் அரை இறுதி போட்டியில் இந்தியாWIN வெற்றிக்கு மிகப் பலமாக இருந்தது ஷமியின் பந்துவீச்சு.
விராத் கோஹ்லி சாதனைகளுடன் சதம் அடித்திருந்தும்,ஷ்ரேயஸ் ஐயர் சதம் அடித்தும் , இறுதிகட்டத்தில் வேகமாக ரன்களை குவித்தும், இந்தியா 397 ஓட்டைகளை பெற்றதும். அதுவரை சிறப்பு.
ஆனால் நியூஸிலாந்து அணி ஒரு கட்டத்தில் 39/2 , என்று இருந்தபோது கேன் வில்லியம்சன் மற்றும் டரில் மிட்செல் இணைப்பாட்டம் அதிகளவு பயத்தை காட்டியது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்தியாவின் சூழல் பந்து வீச்சும் கைகொடுக்கவில்லை , பும்ராஹ் ,சிராஜ்
போன்றவர்களும் தடுமாறும்போது.
ஷமி பெற்ற கேன் வில்லியம்சன் மற்றும் டொம் லதம் விக்கெட்டுகள் வெற்றியை இந்தியா பக்கம் மீண்டும் திருப்பிய தருணம்.
டரில் மிட்செல் நிலைத்து நின்று ஆட , மறுமுனையில் அவருக்கு யாருமில்லை தோள்கொடுக்க ..
ஷமியின் ஆக்ரோஷமான பந்து வீச்சு , அவருக்கு ஆட்ட நாயகன் விருதையும் பெற்று தந்தது.
இந்தியா 70 ஓட்டங்களால் வெற்றி
ஷமி 57 ஓட்டங்களை கொடுத்து 7 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்திய அணிக்கு வாழ்த்துகள் …