வெல்லம்பிட்டி ஜெயவேரகொட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டுள்ள மதில் சுவர் இடிந்து விழுந்ததில் தரம் ஒன்று மாணவர்கள் ஆறு பேர் காயம்.
பாடசாலை இடைவேளை நேரம் நீர் அருந்த சென்ற மாணவர்கள் மீது குறித்த மதில் சுவர் இடிந்து விழுந்துள்ளது. காயமடைந்த மாணவிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிந்தி கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த மாணவியின் பிறந்த தினம் இன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.