சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செல்ஃப் செக் – இன் (Self Check – in) மற்றும் செல்ஃப்-பக்-டிரொப் (Self Back – Drop) சேவைகளை இன்று (14) அறிமுகப்படுத்தியுள்ளது.
செல்ஃப் செக்-இன் (Self Check – in) மற்றும் செல்ஃப்-பக்-டிரொப் (Self Back – Drop) சேவைகளைப் பயன்படுத்தி விமானச் செக்-இன், இருக்கை தேர்வு மற்றும் போர்டிங் பாஸ் மற்றும் பக் குறிச்சொற்களை அச்சிடுதல் உள்ளிட்ட முழு செக்-இன் செயல்முறையையும் பயணிகள் இப்போது சுயாதீனமாக முடிக்க முடியும்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் தங்களுடைய பொருட்களை சிரமமின்றி செல்ஃப்-பக்-டிரொப் மூலம் இறக்கிவிட்டு, குடியேற்ற அனுமதிக்குப் பிறகு போர்டிங் கேட்களுக்கு நேரடியாகச் செல்லவும் முடியும்.
இந்த சேவைகளைப் பயன்படுத்துவதன் வாயிலாக அதிக எண்ணிக்கையான பயணிகளையும் இலகுவாக சமாளிக்க முடியும் என சிறிலங்கன் ஏர்லைன்ஸ் இன் விமான நிலைய மற்றும் தரைவழி கையாளுதலின் சிரேஷ்ட முகாமையாளர் தீபால் பல்லேகங்கொட தெரிவித்தார்
மேலும் இந்த நிகழ்வில் சிறிலங்கன் எயார்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டல், மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் லிமிடெட் தலைவர் சந்திரசிறி மற்றும் பலர் இந்த புதிய சேவையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.